தமிழகம் முழுவதும் 40 மையங்களில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பயிற்சி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் கணினி பயன்பாட்டை தெரிந்து கொள்ளவும் வகுப்பறையோடு தகவல் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் தேவைப்படும் கல்விசார் கணினி வளங்களை தயார் செய்து கொள்வதற்கு கணினி பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக 2017-2018ம் கல்வியாண்டில் 32 மாவட்டங்களிலும் பணிமனைகள் அமைத்து மாதந்தோறும் 2 பயிற்சி என்ற வீதத்தில் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது. அதன்படி 2017-2018ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 40 மையங்களில் 80 பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட உள்ளது. இன்டர்மீடியட் மற்றும் அட்வான்ஸ்டு’ என மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டு ஆசிரியர்களின் கணினி பயன்பாட்டின் முன்னறிவை சோதித்து அதனடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும். இந்த மூன்று நிலைகளிலும் பயிற்சி பெற தகுந்த ஆசிரியர் மாவட்டம் தோறும் ‘டயாக்னிஸ் டெஸ்ட்’ மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக மாநில அளவில் தேர்ந்தெடுக்கப
Posts
Showing posts from August 18, 2017
- Get link
- X
- Other Apps
டிப்ளமா ஆசிரியர் படிப்பு 31ம் தேதி வரை, 'அட்மிஷன்' தொடக்க கல்வித் துறையில், 'டிப்ளமா' ஆசிரியர் படிப்பில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 450 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், டிப்ளமா ஆசிரியர் படிப்பான, டி.டி.எட்., நடத்தப்படுகிறது. இதில், மாணவர்களை சேர்க்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, 12 ஆயிரம் இடங்களுக்கு, இதுவரை, 1,200 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும், 10 ஆயிரத்து 800 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில், மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. வரும், 31ம் தேதி வரை, அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன கல்லுாரிகளில், மாணவர்கள் நேரடியாக சேர்க்கப்படுவர் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக, தங்கள் சான்றிதழ்களை எடுத்து சென்று, ஆசிரியர் டிப்ளமா படிப்பில் சேரலாம்' என, மாநில