Posts

Showing posts from August 16, 2017
'ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த தனியாக நிதி ஒதுக்க வேண்டும்' அப்துல்கலாம் விருது பெற்ற தியாகராஜன் வேண்டுகோள் ''தமிழக அரசு புதிய பாட்டத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதோடு, அதற்கேற்ப ஆசிரியர்களின் தரத்தையும் உயர்த்த வேண்டும். இதற்காக தனியாக நிதி ஒதுக்க வேண்டும்,'' என, தமிழக அரசின் அப்துல்கலாம் விருது பெற்ற, விஞ்ஞானி தியாகராஜன் தெரிவித்தார். தமிழக அரசின், டாக்டர் அப்துல்கலாம் விருது, சென்னை பல்கலை முன்னாள் துணை வேந்தர், தியாகராஜனுக்கு, நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் பழனிசாமி வழங்கினார். எட்டு கிராம் எடை கொண்ட தங்கப்பதக்கம், ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. இவர், எட்டு கண்டுபிடிப்புகளுக்கு, காப்புரிமை பெற்றுள்ளார். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு, செவாலியேவிருது வழங்கி, கவுரவித்துள்ளது. விருது பெற்றது குறித்து, தியாகராஜன் கூறியதாவது: உயர்கல்வித்துறை யில், 50 ஆண்டுகளாக உள்ளேன். சென்னை பல்கலையில் துணைவேந்தர் உட்பட, பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன். தமிழக அரசு விருது; அதிலும், அப்துல்கலாம் பெயரிலான விருது பெற்றது, இரட்டிப்
பொது தேர்விற்கும் இனி ஆதார் எண்.. பள்ளிக் கல்வி துறை அதிரடி உத்தரவு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களின் ஆதார் எண்ணைச் சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பள்ளிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வு முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, தேர்வு எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இந்தாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்னரே தேர்வு தொடங்கும் தேதி, முடியும் தேதி, முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றைப் பள்ளி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாடுகளில் பள்ளி கல்வித் துறை ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரத்யேக படிவம் ஒன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நிரப்பி பள்ளிகளில் வழங்க மாணவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் படிவத்தில் ஆதார் எண், தந்தையின் செல்போன் நம்பர், மாற்றுத் திறனாளிகள் மாணவர் பற்றிய கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விவரங்கள் பள்ளி கல்வித் துறைக்கு