அங்கன்வாடி மைய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 1104 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆகஸ்ட் 17 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இனசுழற்சி அடிப்படையில் பொது பிரிவினர், தாழ்த்தப்பட்டோர்(அருந்ததியர்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம் தவிர), தாழ்த்தப்பட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) என தனித்தனியே பிரிக்கப்பட்டுள்ளது. அதில், முதன்மை அங்கன்வாடி- 544 காலி பணியிடம், குறு அங்கன்வாடி மைய பணியாளர்-77, அங்கன்வாடி மைய உதவியாளர்-483 என மொத்தம் 1104 காலி பணியிடங்கள் உள்ளன. முதன்மை மற்றும் குறு அங்கன்வாடி மைய பணியாளருக்கான தகுதிகள்- 1.7.2017 அன்று 25 வயத
Posts
Showing posts from August 5, 2017
- Get link
- X
- Other Apps
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வு: 1,953 பணியிடங்களுக்கு 7.50லட்சம் பேர் போட்டி டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. மொத்தம் 1,953 காலி பணியிடங்களுக்கு 7 லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் போட்டி போடுகிறார்கள். தமிழக அரசின் துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங் கள் டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ தேர்வு மூலமாக நேரடியாக நிரப் பப்படுகின்றன. பட்டப்படிப்பை கல்வித் தகுதியாக கொண்ட இப்பணிக்கு எழுத்துத்தேர்வு அடிப்படையில்தான் பணியாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். நேர்முகத்தேர்வு எதுவும் கிடை யாது.இந்த நிலையில், பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள உதவியாளர் பதவி, தலைமைச் செயலகம் மற்றும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேர்முக எழுத்தர் பதவி, தலைமைச் செயலகத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவி ஆகியவற்றில் 1,953 காலியிடங் களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி அண்மையில் குருப்-2ஏ-தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இத்தேர்வுக்கு 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்