5,8ம் வகுப்புக்கு பொது தேர்வு?: செங்கோட்டையன் விளக்கம் ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் நேற்று நடந்த, தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: ''மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளார். ''இது பற்றி, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு முறையாக எந்த தகவலும் வரவில்லை. அவ்வாறு வந்தால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
Posts
Showing posts from August 4, 2017
- Get link
- X
- Other Apps
ஆசிரியர் படிப்பை முடித்த 4 லட்சம் பேருக்கு பணி வழங்க எவ்வளவு ஆண்டுகள் ஆகும்?: அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 4 லட்சம் ஆசிரியர்களுக்கு பணி வழங்குவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்பதை தமிழக அரசு தெரியப்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில், எஸ்.வி.ஐ. கல்வியியல் கல்லூரி கடந்த 2007 -ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் 2017 -18-ஆம் கல்வியாண்டில் இளங்கலை கல்வியியல் படிப்பில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், புதிதாக முதுகலை படிப்பை தொடங்கவும் அணுமதி கோரப்பட்டது. அந்த விண்ணப்பத்தை நிராகரிப்பது தொடர்பாக, தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி கல்லூரி நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கெனவே, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழகத்தில் கல்வித் தரம் குறைவதற்கு 'லெட்டர்பேடு' கல்லூரிகளும், அங்கு பயின்ற ஆசிரியர்களுமே காரணம் எனக் கூறி, இதுதொடர்பாக தாமாகவே முன்வந்து வழக்க...