Posts

Showing posts from August 3, 2017
Image
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடக்குமா? ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு மூலம் 1,953 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வு ஆக., 6 ல் நடக்கிறது. இதற்காக 7.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தேர்வர்களுக்கான ’ஹால்டிக்கெட்’ டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது.  தேர்வு கண்காணிப்பு பணிக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஜாக்டோ ஜியோ சார்பில் ஆக., 5 ல் சென்னையில் கோட்டையை நோக்கி ஊர்வலம் நடக்கிறது. இதில் 70 சங்கங்களைச் சேர்ந்த பல லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் ஆக., 6 காலையில் தான் ஊர்களுக்கு திரும்புவர்.  இதனால் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது சிரமம். போராட்டத்தை காரணம் காட்டி சில ஆசிரியர் சங்கங்களும் தேர்வு பணியில் ஈடுபட போவதில்லை என, தெரிவித்துள்ளன. இதனால் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரி ஒர...
8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: ரத்து செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல். பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியளிக்கும் நடைமுறையை ரத்து செய்வதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மேலும், நாடு முழுவதும் சர்வதேசத் தரத்திலான 20 கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.  அவற்றில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறை ரத்து விவகாரம் குறிப்பிடத்தக்க ஒன்று. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அதனை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.  அதன்படி, கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டது. அதாவது 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயத் தே...
புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல் தமிழகத்தில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான, புதிய பாடத் திட்டத்துக்கான வரைவு அறிக்கை, இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்க ளுக்கு, 13 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப் படவில்லை. அதனால், பள்ளிக் கல்வியை முடிக்கும் மாணவர்கள், உயர் கல்வியில் சேர்வ தற்கான நுழைவு தேர்வுகளில், தேர்ச்சி பெற முடிவதில்லை.  எனவே, பாடதிட்டத்தை மாற்ற, கல்வியாளர் களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர். இதை யடுத்து, ஒன்று முதல், பிளஸ் 2 வரை புதிய பாடத் திட்டத்தை உருவாக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது.  இக்குழு சார்பில், சென்னையில், ஜூலை, 20ல், கருத்தரங்கம் நடந்தது. ஜூலை, 25ல், உயர் மட்ட குழு கூட்டம்நடந்தது. இதில், பாடத் திட்ட தயாரிப்பு குறித்து, கொள்கை முடிவுகள் எடுக்கப் பட்டன. ஜூலை, 21, 22ம் தேதிகளில், ஆசிரியர்கள், பேரா சிரியர்கள், பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவின், பாடத்திட்ட கருத்தரங்கம், சென்னையில் நடந்தது.இதில், பாடத்திட்டம் எப்படி இருக்க வேண் டும் என, கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு,...