'நீட்' குழப்பத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி வேளாண் படிக்க விண்ணப்பித்தோர் வேதனை நீட்' குழப்பத்தால், மருத்துவம் படிக்க விரும்புவோர் மட்டுமின்றி, வேளாண் மாணவர் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின் குழப்ப அறிவிப்புகளால், வேளாண் படிப்புக்கு விண்ணப்பித்த, பல்லாயிரம் மாணவர்கள், கலை, அறிவியல் படிப்புகளில் சேர முடியாத, அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் அதன், 14 உறுப்புக் கல்லுாரிகள், 21 இணைப்பு தனியார் கல்லுாரி களில், 13 வகையான பாடப்பிரிவுகளில், மொத்தம், 2,820 இடங்கள் உள்ளன. இவற்றில், 2,360 இடங்கள், வேளாண் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்படும்; மற்றவை நிர்வாக ஒதுக்கீட்டிற்குரியவை. கலந்தாய்விற்குரிய படிப்புகளில் சேர, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, நடப்பாண்டில் மிக அதிகப்படியாக, 53 ஆயிரம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவ அட்மிஷன் குழப்பம் காரணமாக, வேளாண் படிப்பிற்கு ஏற்பட்ட கிராக்கியால், விண்ணப்பங் களின் எண்ணிக்கை கணிசமாக கூடியதாக, வேளாண் பல்கலை தெரிவித்தது. ப...
Posts
Showing posts from July 31, 2017
- Get link
- X
- Other Apps
+2 மாணவர்களின் பயத்தை போக்கவே மாதிரி வினா-விடை வழங்க ஏற்பாடு: கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் கோபியில் கல்விதுறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிளஸ்-2 மாணவர்களுக்கு பரிட்சை எழுதும்போது பயத்தை போக்கும் வகையில் அவர்களுக்கு மாதிரி வினா-விடை வழங்கப்பட உள்ளது. இதேபோல் பிளஸ்-1 வகுப்பு பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் பொது தேர்வுக்கு மாதிரி வினாத்தாள் அறிமுகப்படுத்தப்படும். ஈரோடு மாவட்ட மாணவ-மாணவிகள் பயன்படும் வகையில் நம்பியூரில் அரசு கலை கல்லூரி 4-ம்தேதி தொடங்கப்பட உள்ளது. அதேநாளில் டி.என்.பாளையத்தில் ஐ.டி.ஐ. அரசு சார்பில் தொடங்கப்பட உள்ளது. மாணவ- மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்பட உள்ளது. மேலும் 450 மையங்களில் பல்வேறு பொது தேர்வுகளை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் 3 மணி நேரம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். மாணவர்களின் பல்வேறு நிலைகளில் அதற்கேற்ப திட்டங்கள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- Get link
- X
- Other Apps
பிளஸ்–1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் கோபியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழக அரசால் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. முதலில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாணவ–மாணவிகள் பொதுத்தேர்வை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 450 மையங்களில் பயிற்சி அளிக்கப்படும். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களால் பிளஸ்–1 மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளார்கள். அவர்களது அச்சத்தை போக்கும் வகையில் மாதிரி வினாத்தாள் நாளைக்கு (அதாவது இன்று) வழங்கப்படும். இதற்காக 54 ஆயிரம் மாதிரி வினாத்தாள்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. அந்த மாதிரி வினாத்தாள் மூலம் மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளலாம். அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரப்படும். இவ்...