பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு மதுரை பழைய மாகாளிப்பட்டியைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- வரும் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கடந்த மே மாதம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தேவையற்றது. எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக மாணவர்கள் தூக்கமின்றி கடினமாக உழைக்கிறார்கள். அதற்காக தினசரி பள்ளி முடிந்த பின்பு டியூசனுக்கு சென்றும் படிக்கின்றனர். இதேபோல பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில் பிளஸ்-1 வகுப்பிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்களும், பெற்றோர்களும் சிரமத்திற்கு ஆளாவார்கள். தொடர்ந்து 3 ஆண்டுகள் பொதுத்தேர்வுகளுக்காக தூக்கமின்றி, கடினமாக உழைக்க வேண்டியிருப்பதால், மாணவர்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாவதுடன், விரக்தி அடைந்துவிடுவார்கள். எனவே பிளஸ்-1 வகுப்பில் பொதுத்தேர்வு நடத்த வழிவகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீத...
Posts
Showing posts from July 13, 2017
- Get link
- X
- Other Apps
பிளஸ் 2 பொது தேர்வு; புதிய விதிகள் தயார் மாதிரி தேர்வு நடத்த முடிவு பிளஸ்1 பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் முறை இறுதி செய்யப்பட்டு உள்ளது. அரசாணை வெளியிடும் முன், மாதிரி தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சீர்திருத்த நடவடிக்கைகளில், முக்கிய அம்சமாக, தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 பாடத்துக்கும், பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, பிளஸ்1 பொது தேர்வு, பாடத்துக்கு, 200 மதிப்பெண்களுக்கு பதில், 100 மதிப்பெண்ணாக குறைக்கப்பட்டு உள்ளது.தேர்வு நேரமும், இரண்டரை மணி நேரமாக மாற்றப்பட்டு உள்ளது. இதே முறை, அடுத்த ஆண்டு, பிளஸ் 2 மாணவர் களுக்கும் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், புதிய தேர்வு முறையில், வினாத் தாள் முறை மற்றும் தேர்வு விதிகளை உருவாக்க, தமிழக அரசின் சார்பில் வல்லுனர் கமிட்டி அமைக் கப்பட்டது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளியை ஒருங் கிணைப்பாளராகவும், தேர்வுத் துறை முன்னாள் இயக்குனர் தேவராஜ...