தமிழகத்தில் அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர்கள் நிர்ணயம், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் உள்ளது போல் மாற்றியமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டம் 11.8.2010ன் படி அரசு மற்றும் உதவி பெறும் தொடக்க பள்ளிகளில் 1:30 என்ற விகிதத்திலும், நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 1:35 விகித்திலும் ஆசிரியர் மாணவர்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், 150 மாணவர்கள் வரையுள்ள பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆனால் 150க்கு மேல் மாணவர் எண்ணிக்கை இருக்கும்பட்சத்தில் ஆசிரியர் மாணவர் நிர்ணயத்தில் குழப்பம் நீடிப்பதாக உள்ளது. அதாவது 150 - 200 மாணவருக்கு 6 ஆசிரியர், 201-240க்கு 7 ஆசிரியர், 241- 280க்கு 8 ஆசிரியர் என நிர்ணயம் விதி உள்ளது. இதன்படி தொடக்கப் பள்ளிகளில் 150க்கு மேல் மாணவர்கள் எண்ணிக்கை இருக்கும் பட்சத்தில் 1:35 என்ற அடிப்படையில் தான் ஆசிரியர் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால் அதேநேரம் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் இருந்தாலும் 1:35 என்ற அடிப்படையில் தான் ஆசி...
Posts
Showing posts from July 10, 2017
- Get link
- X
- Other Apps
பிளஸ் 2 மதிப்பெண் சான்று இன்று முதல் வினியோகம் தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, முதலில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிந்த நிலையில், இன்று முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர் தாங்கள் படித்தபள்ளிகளுக்கு சென்று, காலை, 10:00 மணி முதல், தலைமை ஆசிரியரிடம் அசல் மதிப்பெண் சான்றிதழை பெறலாம். தனித்தேர்வர்கள், தங்கள் தேர்வு மையங்களில், மதிப்பெண் சான்றிதழை பெறலாம். இந்த சான்றிதழின் படி, தங்கள் வேலை வாய்ப்பு பதிவையும், பள்ளிகளில், ஆன்லைனில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும், 24ம் தேதி வரை, ஒரே பதிவு மூப்பில், பெயர் விபரங்கள் பதிவு செய்யப்படும். சான்றிதழ் பெறும் மாணவர்கள், 10ம் வகுப்பில் பதிவு செய்திருந்தால், அந்த வேலை வாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டையின் நகல், தொலைபேசி எண் போன்ற விபரங்களுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும்.மேலும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்திலும், வேலை வாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம் என, வேலை வாய்ப...
- Get link
- X
- Other Apps
பி.எட்., கல்லூரிகளில் தில்லுமுல்லு : கல்வியியல் பல்கலை அதிரடி முடிவு பி.எட்., கல்லுாரிகளில் தகுதி இல்லாத முதல்வர்கள் இருப்பதால், அவர்களின் கல்வித் தகுதியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை முடிவு செய்துள்ளது. பட்டதாரிகள், ஆசிரியர் பணியில் சேர வேண்டும் எனில், பி.எட்., படிப்பை முடித்திருப்பதோடு, ஆசிரியர் தகுதி தேர்விலும், கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கண்காணிப்பு : நாடு முழுவதும் உள்ள, பி.எட்., படிப்புக்கான கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, என்.சி.டி.இ., என்ற, தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் வழங்குகிறது. தமிழகத்தில், என்.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படும். இதனால், பல்கலையின் முழு கட்டுப்பாட்டில், கல்லுாரிகள் செயல்பட வேண்டும். மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை கண்காணிக்கும். இந்நிலையில், பி.எட்., கல்லுாரிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து, கல்வியியல் பல்க...