Posts

Showing posts from July 8, 2017
பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம் 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, ௧௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி, மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்தனர். இந்நிலையில், 'பிளஸ் 2 மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், வரும், 10ம் தேதி காலை, 10மணி முதல், பள்ளிகளில், தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தனித்தேர்வர்கள், தேர்வு எழுதிய பள்ளிகளில், சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'பிளஸ் 2 மாணவர்களுக்கு, ௧௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவு வந்ததும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது.  அதை பயன்படுத்தி, மாணவர்கள்
போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு உடல் தகுதி தேர்வு மாதம் இறுதியில் நடக்கிறது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 23-1-2017 அன்று இரண்டாம் நிலைக் காவலர் (13,137), இரண்டாம் நிலை சிறைக் காவலர் (1,015) மற்றும் தீயணைப்போர் (1,512) பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டது. இதுவரை நடைபெற்ற போலீஸ் வேலைக்கான பொதுத் தேர்வுகளிலேயே இந்த தேர்வில் தான் அதிக பட்சமாக (6.32 லட்சம்) விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதற்குமுன்பு 2012-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் அதிகபட்சமாக 2.71 லட்சம் விண்ணப்பங்களே பெறப்பட்டது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்திய பொதுத் தேர்வில் முதன் முறையாக திருநங்கைகள் மூன்றாம் பாலினப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர். 21-5-2017 (ஞாயிறு) அன்று சென்னை உள்பட 32 மாவட்ட தலைநகரங்களில் 410 தேர்வு மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் 4.82 லட்சம் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினார்கள். எழுத்துத் தேர்
ஆசிரியர்கள் போராட நினைப்பது எந்த வகையில் நியாயம்? ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் கேள்வி தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த பள்ளி நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணைப்படி எத்தனை அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி கொண்டுவரப்பட்டுள்ளது?, தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தான் ஆங்கில வழிக்கல்வியிலும் பாடம் நடத்துகின்றார்களா?, அந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பாடம் நடத்த உரிய பயிற்சி பெற்றுள்ளார்களா?, அரசு பள்ளிகளை விட்டுவிட்டு தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் சேர்க்க காரணம் என்ன?, அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்று அரசு ஏன் கட்டாய உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது உள்ளிட்ட 20 கேள்விகளை எழுப்பியது. அதன்பின்பு, இதுதொடர்பாக வருகிற 14-ந்தேதிக்குள் அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இ