
'TET - 2017' தகுதி தேர்வில் 4.64 சதவீதம் தேர்ச்சி - தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் ஆசிரியர் பணிக்கான ' டெட் ' தகுதி தேர்வு எழுதிய 7.53 லட்சம் பேரில் , 4.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் . கணிதம் , அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி குறைந்துள்ளது . தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான ' டெட் ' தகுதி தேர்வு ஏப்ரல் 29,30 ல் நடந்தது . இதில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தனித்தனியாக தேர்வு நடந்தது . முதல் தாளில் 2.41 லட்சம் பேரும் ; இரண்டாம் தாளில் 5.12 லட்சம் பேரும் பங்கேற்றனர் . அவர்களில் 4.64 சதவீதமான 34 ஆயிரத்து , 979 பேர் தேர...