Posts

Showing posts from June 26, 2017
தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் வேலை: 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் உதவி கணக்காளர் அதிகாரி பணியிடங்களுக்கு சிஏ முடித்தவர்களிடமிருந்து 27க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Asst.Accounts Officer காலியிடங்கள்: 18 சம்பளம்: மாதம் ரூ.15,700 - 39,000 வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: சிஏ, சிஎம்ஏ முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 09.07.2017 விண்ணப்பிக்கும் முறை: www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.06.2017 மேலும் விவரங்கள் அறிய www.tangedco.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
10, 12 பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: சிபிஎஸ்இ பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ உயரதிகாரி ஒருவர் தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து முடிவெடுக்க இயலாது. இந்த யோசனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு உள்படுத்தப்படும். அதன்பிறகே இதுதொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் விடைத்தாள்கள் திருத்தப்படுவதில் தவறுகள் நேரிடுவதாக சிபிஎஸ்இக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அதுதொடர்பாக ஆய்வு செய்து அப்பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை வழங்குமாறு 2 குழுக்களை சிபிஎஸ்இ அமைத்தது. அந்தக் குழுக்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை
Image
அரசு பள்ளிகளில்  சேர்க்க சிபாரிசு: செங்கோட்டையன் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது: பள்ளிக் கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட்டு வரும் மாற்றங்களால், அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அடுத்த 6 மாதங்களுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் பரிந்துரை கேட்கும் சூழல் உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Image
எச்சரிக்கை! நர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள்: மாணவர்கள் உஷாராக இருக்க கவுன்சில் தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரிகளில், 17 வகையான போலி படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. 'விபரம் தெரியாமல், மாணவர்கள் இவற்றில் சேர்ந்து ஏமாற வேண்டாம்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்து உள்ளது. தமிழகத்தில், ஜூலை, 17ல், மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்க உள்ளது. அடுத்த கட்டமாக, நர்சிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைபெறும். வேலை கிடைக்கும் இந்நிலையில், தமிழகத்தில், அனுமதியின்றி செயல்படும், 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளி, கல்லுாரி களில், 17 வகையாக, போலியான நர்சிங் படிப்புகள் நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. இதில், சேர்ந்து ஏமாற வேண்டாம் என, நர்சிங் கவுன்சில், எச்சரித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு:தமிழகத்தில், நர்சிங் பள்ளி, கல்லுாரிகளுக்கு, இந்தியன் நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் மூலம் அங்கீகா ரம் வ