Posts

Showing posts from June 17, 2017
Image
Teachers Recruitment Board   College Road, Chennai-600006 Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade - I for the year 2015 - 16 and 2016 - 17             HALL TICKET              TRB issued Notification for the Direct Recruitment of Post Graduate Assistants / Physical Education Directors Grade - I vide Advertisement No.03/2017, dated 09.05.2017. In this connection, TRB now releases the Provisional Hall Tickets for those candidates who applied for the said examination.              It is informed to all applicants that the decision of the Board to issue Hall Tickets to all applicants is purely provisional and does not confer any acceptance of their claim in the application. Issuing the Hall Tickets and permitting the candidates to sit for the examin...
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு இன்று முதல் விண்ணப்பம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களில், 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, ஆகஸ்ட், 13ல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. இதற்கானஅறிவிப்பு,நேற்றுஆசிரியர்தேர்வுவாரியஇணையதளத்தில்,   www.trb.tn.nic.in  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, ஆன்லைன் மூலமாக, இன்று முதல், ஜூலை, 7 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை ஆசிரியர் எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை -1 பணியிடங்களுக்கு, ஜூலை, 2ல் எழுத்து தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு, 2.18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்,  www.trb.nic.in  என்ற இணையதளத்தில், இன்று காலை, 10:00 மணி முதல் பதிவிறக்கம் செய்யலாம். கடைசி நேர பதற்றத்தை தணிக்க, முன்கூட்டியே, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
பி.எட். பட்டப்படிப்பு விண்ணப்பம் 21-ந்தேதி வினியோகம் தமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் பி.எட். கல்லூரிகளும் உள்ளன. இந்த 21 கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு 1,777 இடங்கள் உள்ளன. இந்த படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் பி.எட். கல்லூரி, சைதாப்பேட்டை பி.எட். கல்லூரி உள்பட 13 பி.எட். கல்லூரிகளில் 21-ந்தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படுகின்றன. 30-ந்தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும், விலை ரூ.500. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 3-ந்தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை 2017-2018, விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் (தன்னாட்சி), காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5 என்ற முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்பி வைக்கவேண்டும். இந்த தகவலை கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.