42 புதிய அறிவிப்புகள் புதிதாக 4,084 ஆசிரியர்கள் நியமனம அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் தகவல் தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கையில் நேற்று எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டு விவாதித்தனர். அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தமிழகத்தில் தொலைதூர கிராமப் பகுதிகள், மலைப்பகுதிகளில் மிக அவசியமாகக் கருதப்படும் மக்கள் தொகை அதிகமுள்ள இடங்களில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, 30 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படவுள்ளது. மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல், புதுமையான கற்பித்தல் முறையை பின்பற்றுதல், அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவு செய்தல் உள்பட அனைத்து வகையிலும் புதுமையான விதத்தில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி என்ற விருது வழங்கப்படும். ஒரு மாவட்டத்துக்கு ஒரு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்...
Posts
Showing posts from June 16, 2017