Posts

Showing posts from June 13, 2017
TET தேர்வு முடிவுகள் - ஜூலை முதல் வாரத்தில் வெளியீடு! ஜூலை முதல் வாரத்தில் TET தேர்வு முடிவுகள்: ஆசிரியர் தகுதிக்கான, ‘டெட்’ தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், ‘டெட்’ தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர்.கொள்குறி என்ற, ‘அப்ஜெக்டிவ்’ வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக் குறிப் புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர். இந்த கடிதங்களை, ஆசி ரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறா கவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்த தும் தெரிய வந்தது. இதை யடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது. ஜூலை ம...
புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க ஆர்வமான ஆசிரியர்களுக்கு அழைப்பு புதிய பாடத்திட்டத்தை தயாரிப்பதில் பங்கேற்க விரும்பும் தன்னார்வ வல்லுனர்களை, பள்ளிக் கல்வித் துறை வரவேற்றுள்ளது. இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பாடத் திட்டத்தை மாற்றவும்,  பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு நடத்தவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதிய பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களை வடிவமைக்க, அனுபவமிக்க கல்வியாளர்கள், பேராசிரியர்களை குழுவில் ஈடுபடுத்த, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.  எனவே, ஆர்வம் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள், தங்கள் பெயர் விபரங்களை,  www.tnscert.org  என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். ஆர்வம் உள்ளவர்கள், இணையதளம் மூலம் இன்று முதல், ஜூன், 23, மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி 'டிப்ளமா' 11 ஆயிரம் இடங்கள் காலி பள்ளிக்கல்வித் துறை நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில், எஸ்.சி.இ.ஆர்.டி., என்ற, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளது. இவற்றின் கீழ், மாநிலம் முழுவதும், அரசு, அரசு உதவி மற்றும் தனியார் என, 463 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், இரண்டு ஆண்டு, டி.டி.எட்., என்ற, டிப்ளமோ  ஆசிரியர் பயிற்சி படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்பில் சேர்வதற்கான, ஒற்றை சாளர மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு, 'ஆன்லைன்' முன்பதிவு அறிமுகமாகிறது. இதற்கு,  www.tnscert.org  என்ற இணையதளத்தில், வரும், 21 வரை, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தமுள்ள, 12 ஆயிரம் இடங்களுக்கு, நேற்று முன்தினம் வரை, 1,063 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். இன்னும், 200 பேர் வரை மட்டுமே விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் மூலம், இந்த ஆண்டு, 90 சதவீதமான, 11 ஆயிரம் இடங்கள் காலியாகும் அபாயம்  ஏற்பட்டுள்ளது.  டிப்ளமோ ஆ...
பிளஸ் 1 வகுப்புக்கு வினா வங்கி புத்தகம் நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 1979ல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் அறிமுகமாகின. ஆனாலும், பிளஸ் 2வுக்கு மட்டுமே, பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 1க்கு, பள்ளிகள் மற்றும் மாவட்டங்கள் அளவில் தேர்வு நடத்தி, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.  இந்நிலையில், மத்திய அரசின், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளில், தமிழக மாணவர்கள் போட்டி போட முடியாமல் திணறுவது, கல்வியாளர்கள் ஆய்வில் தெரிய வந்தது. அதனால், அண்ணா பல்கலை பரிந்துரைப்படி, நடப்பு கல்வியாண்டு முதல், பிளஸ் 1க்கும் பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.  இதனால், 10ம் வகுப்பு, பிளஸ் 2வுக்கு, வினா வங்கி புத்தகம் வெளியிடுவது போல, பிளஸ் 1க்கும், பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் வினா வங்கி புத்தகம் வெளியிட, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதில், மாவட்ட அளவில், இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளின் முக்கிய வினாக்கள் இடம் பெறும் என, தெரிகிறது.