ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர். கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக்குறிப்புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர். இந்த கடிதங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறாகவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது. ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளத
Posts
Showing posts from June 7, 2017
- Get link
- X
- Other Apps
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு Ads by Kiosked தமிழகத்தில் 2017-2018-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு (2018) மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரையிலும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16 வரையிலும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 16 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு அடுத்த ஆண்டு மே 16-ஆம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மே 30-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 23-ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை (தேர்வு நேரம்: காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை):- மார்ச் 1 வியாழக்கிழமை- மொழிப்பாடம் முதல் தாள் மார்ச் 2 வெள்ளிக்கிழமை- மொழிப்பாடம் இரண்டாம் தாள் மார்ச் 5 திங்கள்கிழமை- ஆங்கிலம் முதல் தாள் மார்ச் 6 செவ்வாய்க்கிழமை- ஆங்கிலம் இரண்டா