முதுநிலை ஆசிரியர் தேர்வு அறிவிப்பாணை விவகாரம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடுள்ளது. தமிழகத்தில் வரும் ஜூலை 2 -இல், 1,663 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான அறிவிப்பாணையை மே 9 -ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தத் தேர்வுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பம் செய்வதற்கு மே 30 -ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையில், ஒரு கை, கால் மற்றும் இரண்டு கால்கள் 40 முதல் 70 சதவீதம் வரை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும், அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைபாடு அளவை நிர்ணயித்தது, 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றிய நிலையில், இதற்கு முரணாக 3 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளத...
Posts
Showing posts from May 27, 2017
- Get link
- X
- Other Apps
ஜூன் 23 முதல் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு; மே 29 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்களுக்காக வரும் ஜூன் 23 -ஆம் தேதி முதல் பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு நடைபெறவுள்ளதாக அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், வராதவர்களுக்காக வரும் ஜூன் 23 முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை பிளஸ்-2 துணைத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் அல்லது தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புவோர் பள்ளி அல்லது தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று மே 29-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் ஜூன் 1 (வியாழக்கிழமை) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். தனியார் பிரௌசிங் சென்டர்கள் மூலம்...
- Get link
- X
- Other Apps
பள்ளிகள் திறப்பு ஜூன் 7-க்கு ஒத்திவைப்பு: அமைச்சர் செங்கோட்டையன் கடுமையான வெயில் காரணமாக பள்ளிகள் ஜூன் 7-ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். அரசுப் பள்ளிகளுக்கு கழிப்பிடம் கட்டுவது தொடர்பான இந்த ஆலோசனைக்குப் பிறகு, செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்துடன் விவாதிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 1-ஆம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.