
''லஞ்சத்திற்கான நுழைவு வாயில்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு!' கொதிக்கும் கல்வியாளர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தேர்வை சுமார் 7 லட்சம் பேர் எழுதுகின்றனர்.இந்தத் தேர்வால் எந்தப் பயனும் இல்லை என்றும், குளறுபடியும், லஞ்சமும் தலைவரித்தாடும் சூழல் உருவாகும் என்றும் கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய அரசின் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.அவ்வாறு வெற்றி பெற்றால்தான் அவர்கள் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும் என்ற விதிமுறை உள்ளது. தகுதித் தேர்வை எழுதி வெற்றி பெறுவதற்கானக் காலக் கெடுவையும் ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்துள்ளது. லஞ்சம் பெறவே இந்த தேர்வு.. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித் தேர்வை தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர் எழுதுகின்றனர்.தாள் ஒன்றை இட...