Posts

Showing posts from April 15, 2017
அரசு வேலை வாய்ப்புக்காக81.30 லட்சம் பேர் காத்திருப்பு சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள, வேலை வாய்ப்பு அலுவலகங்களில், 81.30 லட்சம் பேர், வேலைக்காக தங்கள் பெயரை, பதிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில், மார்ச் மாதம் வரை பதிவு செய்துள்ளோரின் விபரங்களை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  இதன்படி, 81.30 லட்சம் பேர், அரசு வேலைக்காக தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.இதில், பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தோர், 4.26 லட்சம்; பத்தாம் வகுப்பு படித்தோர், 59.02 லட்சம்; பிளஸ் 2 முடித்தோர், 36.52 லட்சம்; பொறியியல் டிப்ளமோ முடித்தோர், 3.21 லட்சம்; பிற டிப்ளமோ முடிந்தோர், 92 ஆயிரத்து, 948 பேர் உள்ளனர். மேலும், இளநிலை பட்டதாரிகள், 82 ஆயிரத்து,  921 பேர்; முதுநிலை பட்டதாரிகள், 2.23 லட்சம் பேரும், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.அதிபட்சமாக, வேலுார் மாவட்டத்தில், 3.69 லட்சம் பேர், விழுப்புரம் மாவட்டத்தில், 3.50 லட்சம் பேர்; சேலம் மாவட்டத்தில்,  3.47 லட்சம் பேர், வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.
ஆய்வக உதவியாளர் பணி தரவரிசை தயாரிப்பு தீவிரம் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது. அரசு பள்ளிகளில், மத்திய இடைநிலை கல்வி இயக்கமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு, 2015 மே மாதம் நடந்தது. கடந்த மாதம், தேர்வு முடிவுகள் வெளியாகின. இதையடுத்து, மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஏப்., 9 முதல், 11 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. தற்போது, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிந்தைய மதிப்பெண் பட்டியலை, அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். சில மாவட்டங்களில், மதிப்பெண் பட்டியலை, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில், தரவரிசை பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது. தேர்வர்களின் எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் சான்றிதழ்களுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் போன்றவற்றை இணைத்து, தரவரிசை தயார் செய்யப்படுகிறது. இதில், இட ஒதுக்கீடு, சிறப்பு ஒதுக்கீடு படி, இறுதியாக தேர்வாகும் நபர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. சென்னைக்க
ஓய்வு பெறும் ஆசிரியர் இடங்கள் பள்ளிக்கல்வி பட்டியல் சேகரிப்பு பள்ளிக்கல்வித் துறையில், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை அடைந்தால், அவர்களுக்கு அந்த கல்வி ஆண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்கப்படும். அதன்படி, மே மாதம் ஓய்வு பெறும் உத்தரவு வழங்கப்படும். அதன்படி, இந்த ஆண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர். ஆனால், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை விகிதத்தில், ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக இருப்பதால், ஓய்வு பெற்றதும் அந்த இடங்கள் மீண்டும் நிரப்பப்படாது. ஆனால், இந்த ஆண்டு, காலியிடங்களின் பட்டியலை திரட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, இந்த காலியிடங்களில், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவரா? என, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது, என கூறினர்.
ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பயிற்சி உள்ளாட்சி தேர்தல் குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 2016 அக்டோபரில் நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த தேர்தலை, மே, 14க்குள் நடத்தி முடிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. ஆசிரியர்கள் கோடை விடுமுறையை கழிக்க, வெளியூர்களுக்கு சென்றுவிட்டால் சிக்கல் ஏற்படும். எனவே, ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்த, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, சுற்றறிக்கை அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.