Posts

Showing posts from April 13, 2017
ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதில் சிக்கல் ரேஷன் கடைகளில் வழங்கிய, 17 லட்சம் குடும்ப தலைவர்களின், ஆதார் கார்டுகளில் புகைப்படம் சரியாக இல்லாததால், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு அச்சிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  தமிழக அரசு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் விபரத்தை வாங்கியது. அவை, 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம், 'ஸ்கேன்' செய்து பதிவேற்றப்பட்டது.  தெளிவற்ற புகைப்படம் : அதில் உள்ள பெயர், புகைப்படம், முகவரி அடிப்படையில், 'ஸ்மார்ட் கார்டு' அச்சிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதார் கார்டுகளில், 17 லட்சம் குடும்ப தலைவர்களின், புகைப்படம் தெளிவின்றி, மோசமாக உள்ளது. 17 லட்சம் கார்டுகள் : இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் கார்டில் உள்ள, 'கியூஆர்' ரகசிய குறியீட்டை, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்ததும், அந்த விபரங்கள் அப்படியே, உணவு துறை, 'சர்வருக்கு' வந்தன. ஆதார் விபரம் தந்த, 1.29 கோடி ரேஷன் கார்டுகளில், 17 லட்சம் கார்டுகளில், க...
மின் வாரிய உதவியாளர் மதிப்பெண் வெளியீடு தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், இளநிலை உதவியாளர், 'டைப்பிஸ்ட்' என, 2,175 பணியிடங்களை நிரப்ப, 2016 ஜூன், ஆகஸ்ட் மாதங்களில், எழுத்துத் தேர்வு நடந்தது. அதில் பங்கேற்றவர்கள், தனியாக பார்க்கும் வகையில் மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம், சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. இந்நிலையில், தற்போது, எழுத்துத் தேர்வில் பங்கேற்ற, அனைவரும் பெற்ற மதிப்பெண் முழு விபரம் வெளியிடப்பட்டு உள்ளது.  மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, 10 பதவிகளில், 2,175 பணியிடங்களை நிரப்ப, அண்ணா பல்கலை மூலம், எழுத்துத் தேர்வு நடந்தது; அதில் பங்கேற்ற அனைவரின் மதிப்பெண் விபரமும் வெளியிடப்பட்டது. அதன்படி, 'கட் - ஆப்' மதிப்பெண் நிர்ணயித்து, விரைவில் வெளியிடப்படும்; அதை தொடர்ந்து, நேர்காணல் நடத்தி, அதிக மதிப்பெண் எடுப்பவர்கள், வேலைக்கு தேர்வு செய்யப்படுவர்.
B.Ed படிப்புக்கு தேசிய நுழைவு தேர்வு!!! தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் சார்பில், நேரடியாக பட்டப்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மைசூரு, அஜ்மீர், போபால், புவனேஷ்வர் உள்ளிட்ட, மண்டல மையங்களில், இந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. மிகக் குறைந்த கட்டணத்தில், தங்குமிடம் வசதிகளுடன், பட்டப்படிப்பும், பி.எட்., படிப்பும் இணைந்து நடத்தப்படுகிறது. இந்த படிப்புக்கு, உடனடி வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.  வரும் கல்வி ஆண்டில், பி.எட்., இணைந்த பி.எஸ்சி., - பி.ஏ., படிப்புகள், நான்கு ஆண்டுகளும், பி.எட்., இணைந்த எம்.எஸ்சி., படிப்பு, ஆறு ஆண்டுகளும் நடத்தப்படுகிறது. அதே போல், பி.எட்., - எம்.எட்., தலா இரு ஆண்டுகளும், பி.எட்., - எம்.எட்., இணைந்த படிப்பு, மூன்று ஆண்டுகளும் கற்றுத் தரப்படுகிறது. இந்த படிப்பில் சேர, ஜூன், 11ல் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கு,  www.ncert-cee.kar.nic.in  என்ற இணையதளத்தில், மே, 10 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.