Posts

Showing posts from April 8, 2017
TRB - 1,111 ஆசிரியர்கள் நியமனம் - பட்டதாரி ஆசிரியர்களிடையே குழப்பம் நீடிப்பு-தினத்தந்தி  ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்த 1,111 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட நியமன அறிவிப்பில் பாடவாரியாக பணியிடங்கள் அறிவிக்காததால் பட்டதாரி ஆசிரியர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.
TNTET - 2017 Exam ஹால்டிக்கெட் தயார். டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 47 ஆயிரம்  பேருக்கு ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணியில் டிஆர்பி ஈடுபட்டு  வருகிறது. இதை, அடுத்த வாரம் தபாலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.  கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி  வைக்கப்பட்டு இருந்த டிஇடி தேர்வை ஏப்ரல் மாதத்துக்குள்  நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து ஏப்ரல் 29, 30 தேதிகளில் டிஇடி தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கி மார்ச் 23ம் தேதியுடன்  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரம் விண்ணப்பங்கள்  வரப்பெற்றுள்ளன. விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி  நடக்கிறது.  தவறாக பூர்த்தி செய்தது, தகுதி இல்லாத  பாடங்களுக்கு  விண்ணப்பித்தவை என சுமார் 2,000 பேரின்  விண்ணப்பம் கண்டறியப்பட்டுள்ளது.மற்ற விண்ணப்பங்களுக்கு  ஹால்டிக்ெகட் தயாரிக்கும் பணி நடக்கிறது.  இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி 598 மையங்களில்  இடைந...
Cut-off Seniority dates adopted for nomination in Employment Offices - February-2017 CLICK HERE.....
அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர் பணி 20ல்  சான்றிதழ் சரிபார்ப்பு அரசு இன்ஜினியரிங் கல்லுாரி, உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், தமிழ் வழிக்கான ஒதுக்கீட்டிற்கு, வரும், 20ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. அரசு இன்ஜி., கல்லுாரிகளில், காலியாக உள்ள, 192 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2016 அக்., 22ல், எழுத்துத் தேர்வை நடத்தியது. இதில், 28 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்ச்சி பெற்றோருக்கு, இட ஒதுக்கீட்டு விதிகள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில், ஜன., 19, 20ம் தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்நிலையில், தமிழ் வழியில் படித்தோருக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் தேர்வானவர்களின் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, வரும், 20ல், டி.ஆர்.பி., அலுவலகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெறுவது எங்கே? : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு 'நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர். வரும் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், மே, 7ல் நடக்கிறது. இதற்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. இந்நிலையில், தனியார்  பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு தனியார் மையங்களில், 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை துவக்கி உள்ளனர். ஒரு மாத பயிற்சிக்கு, 20 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும், நகர, கிராமப்புற மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமா என, தவித்து வருகின்றனர். இது குறித்து பெற்றோர் கூறியதாவது: 'நீட்' தேர்வு தமிழகத்துக்கு வராது என, ஆளும் கட்சி ...
ஆய்வக உதவியாளர் பணி: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு ஆய்வக உதவியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, மாநிலம் முழுவதும், நாளை துவங்குகிறது. அரசு பள்ளிகளில், 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங் களுக்கு, 2015,  மே, 30ல் தேர்வு நடந்தது; எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள், மார்ச், 24ல் வெளியாகின. இவர்களுக்கு, நாளை முதல், வரும், 11ம் தேதி வரை, மாவட்டக் கல்வி அதிகாரிகள் மூலம், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. எழுத்துத் தேர்வுக்கு, 150; வேலைவாய்ப்பு பதிவில், இரண்டு ஆண்டு வரை காத்திருப்போருக்கு, 2; நான்கு ஆண்டுகளுக்கு, 4; ஆறு  ஆண்டுகளுக்கு, 6; எட்டு ஆண்டுகளுக்கு, 8; பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போருக்கு, 10 மதிப்பெண்கள் என, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் தரப்படுகிறது.பிளஸ் 2வுக்கு, இரண்டு; பட்டம் மற்றும் அதற்கு மேலான படிப்புகளுக்கு, மூன்று மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆய்வக உதவி யாளராக அனுபவம் இருந்தால், இரு மதிப்பெண்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.  'பத்தாம் வகுப்பு முடித்த பலர், கல்லுாரி களுக்கு செல்ல முடியாமல், தொலை நிலை கல்வியில்,...