Posts

Showing posts from April 5, 2017
ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் மூலம் ரூ.33½ கோடி வருமானம் தேர்வு வாரியத்துக்கு கிடைத்தது ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடந்த மாதம் 6–ந் தேதி தமிழ்நாடு  முழுவதும் ஏராளமான பள்ளிகளில் விண்ணப்ப படிவம் வழங்கும்  பணி தொடங்கியது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  சமர்ப்பிக்க கடந்த மாதம் 23–ந் தேதி கடைசி நாள் ஆகும். பிளஸ்–2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த 2 லட்சத்து 37  ஆயிரத்து 293 பேரும், பி.எட் படித்த பட்டதாரிகள் 5 லட்சத்து 2  ஆயிரத்து 964 பேரும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை  சமர்ப்பித்தனர். மொத்தம் 7 லட்சத்து 40 ஆயிரத்து 257 பேர்  இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு  ஆசிரியர் தகுதி தேர்வு 29, 30–ந் தேதிகளில் நடைபெற உள்ளது. ரூ.33½ கோடி வருமானம்  தற்போது மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.  பரிசீலனைக்கு பிறகு அவர்கள் தேர்வு எழுத அனுமதிச்சீட்டு  தயாரித்து இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் எத்தனை  தேர்வு மையங்களை அமைப்பது என்றும் தற்போது ஆலோசனை  நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப படிவத்துடன் தேர்வு  கட்டணமாக ரூ.500–ஐ வரைவோல