Posts

Showing posts from March 30, 2017
'TET' தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பம் ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு எழுத, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின், 'டெட்' தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மார்ச் 6 முதல், 23 வரை பெறப்பட்டன. மொத்தம், எட்டு லட்சத்து, 47 ஆயிரத்து, 241 பேர் விண்ணப்பம் பெற்றனர். இவர்களில், முதல் தாள் தேர்வுக்கு, 2.37 லட்சம் பேர், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 5.03 லட்சம் பேர் என, 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பம் பெற்றும், 1.07 லட்சம் பேர் விண்ணப்பிக்கவில்லை. விண்ணப்பங்களை, 50 ரூபாய்க்கு விற்றதன் மூலம், டி.ஆர்.பி.,க்கு, 4.24 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 
புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு; 1-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்க ஏற்பாடு எலெக்ட்ரானிக் பதிவுகளின் அடிப்படையில் ஸ்மார்ட் ரே‌ஷன்  அட்டைகளை வழங்கினால் போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும்  என்று கணக்கிட்டு, ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை வழங்கும் திட்டத்தை  தமிழக அரசு அறிவித்தது. அதன் பின்னர் ரே‌ஷன் அட்டைகளை ஆதார் தகவலுடன் இணைக்க  முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரே‌ஷன் அட்டைகளுக்கான ஆதார்  பதிவு தகவல்களும் பெறப்பட்டுவிட்டன. 99 சதவீதம் பதிவு தமிழகம் முழுவதும் இதுவரை 99 சதவீத ஆதார் தகவல்கள் பெறப்பட்டு  ரே‌ஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டன. ஒரு சதவீதம் மட்டுமே  அதாவது தமிழகமெங்கும் சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே ஆதார்  தகவல்களை இணைக்கவில்லை. குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் ஆதார் எண்கள்  மற்றும் செல்போன் எண் போன்ற தகவல்கள், அந்தந்த ரே‌ஷன்  கடைகளில் கடந்த 6 மாதங்களாக இணைக்கப்பட்டு வந்தன. ரே‌ஷன்  அட்டைதாரரின் புகைப்படங்களை ஸ்மார்ட் அட்டையுடன் இணைக்க  அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதில் சற்று காலதாமதம்  ஆகிவிட்டது. இ...