Posts

Showing posts from March 23, 2017
'TET' தேர்ச்சி பெற்றவர்கள் விபரங்களை திருத்த அவகாசம் ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், விபரங்களை திருத்தம் செய்ய, இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 'அரசு பள்ளிகளில், 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்தது. ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்த நியமனத்துக்கு தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து, தேர்வர்களின் விபரங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில், மார்ச், 10ல் வெளியிடப்பட்டன. பட்டதாரிகள், தங்களின் சுயவிபர பதிவுகளை திருத்தம் செய்ய, மார்ச், 20 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 24 ஆயிரத்து, 666 பேர், 'ஆன்லைன்' மூலம் தங்கள் பதிவை சரிபார்த்து, திருத்தம் செய்துள்ளனர்.   இன்னும், 7,961 பட்டதாரிகள் சரிபார்க்கவில்லை. இவர்களுக்காக, இன்று ஒரு நாள் கூடுதல் அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தை தொடர்ந்து, பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என, டி.ஆர்.பி., உறுப்பினர் செ
TET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்) பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை விண்ணப்பிக்க இன்று(மார்ச்.,23) கடைசி நாள். டெட் தேர்வுக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி மார்ச் 6ம் தேதி துவங்கப்பட்டது.    விண்ணப்பங்களை பெற கடைசி நாளான நேற்று வரை, 2 லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களும், 5 லட்சத்து 60 ஆயிரம் பி.எட்., முடித்தவர்களுக்கான விண்ணப்பங்களும் விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .