TET : நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் !! அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 'அரசு, உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வுகட்டாயம்'எனஅறிவிக்கப்பட்டது. கடந்த 2012ல் முதல் முறையாக இத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, '23.8.2010க்கு பின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET தேர்ச்சி கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது. இதன்படி, 'அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,200 ஆசிரியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கும் TET தேர்வு களில், தேர்ச்சி பெறவேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது; ஆனால், 2013க்கு பின் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில், கல்வித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட உத்தரவில், '23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏப்.,29, 30 ல் நடக்கும் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டு...
Posts
Showing posts from March 18, 2017