Posts

Showing posts from March 15, 2017
ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியீடு... ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படுகிறது. 4500 ஆய்வக உதவியாளர் நியமன தேர்வை 8 லட்சம் பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெகுநாட்களாக வெளியிடப்படாத நிலையில் ஓரிரு நாட்களில் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு இம்மாதம் 31ம் தேதிக்குள் பணிநியமனம் செய்யப்படுவார்கள் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
வங்கி சர்வர் பிரச்னை: TET,தேர்வர்கள் அவதி காரைக்குடி:வங்கிகளில் சர்வர் பழுதால் டி.இ.டி., தேர்வு கட்டணம் செலுத்துபவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.ஆசிரியர் தகுதி தேர்வு மூன்று ஆண்டுக்கு பிறகு வருகிற ஏப்ரல் 29,30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப வினியோகம் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 12 இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 23-ம் தேதிக்குள் வழங்க வேண்டும். சிவகங்கை மருதுபாண்டியன் மேல்நிலை பள்ளி, தேவகோட்டை ஆறாவது வார்டு நகராட்சி மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தேர்வு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான செலான் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்கப்படுகிறது. இந்த செலானில் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., கனரா வங்கி ஆகிய மூன்று வங்கிகளில் மட்டுமே தேர்வு கட்டணம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் ஐ.ஓ.பி., வங்கியில் கடந்த இரண்டு நாட்களாக சர்வர் பழுது என்ற காரணத்தை கூறி, தேர்வு கட்டணத்தை வாங்க ...
'TET' தேர்வு அறிவிப்பு : ஆசிரியர்கள் குழப்பம் ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவிப்பும், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகக் குறிப்பும், 'டெட்' தேர்வு குறித்த குழப்பத்தை அதிகரித்துள்ளன.  மூன்றாண்டுகளுக்கு பின், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏப்., 29, 30ல், இரு நாட்கள் தேர்வு நடக்கிறது. அதற்கான விண்ணப்ப வினியோகம், 6ல் துவங்கியது. வரும், 22 வரை விண்ணப்பம் பெறலாம்; 23க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும்.  இது குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிக்கையில், 2011 நவ., 15ம் தேதியிட்ட அரசாணைப்படி, டெட் தேர்வு நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்ட சுற்றறிக்கையில், '2010 ஆக., 23க்கு பின், அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்' என, எச்சரித்துள்ளார்.அதனால், ஆசிரியர்கள் கடும் குழப்பம் அடைந்துள்ளனர். இது குறித்து, உயர், மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்...