கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் நியமிக்கப்படுவரா? அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாட ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த, 1992ல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், கணினி அறிவியல் அறிமுகமானது. அப்போது, கணினி இயக்கத் தெரிந்த, 'டிப்ளமோ' பட்டம் பெற்றவர்கள், கணினி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். பின், கணினி அறிவியல் படித்த, மற்ற பாட ஆசிரியர்கள், வகுப்பு எடுக்க உத்தரவிடப்பட்டது. அதனால், 1992ல் பணியில் சேர்ந்தவர்கள், 2008ல் நீக்கப்பட்டனர்; அவர்கள், நீதிமன்றத்திற்கு சென்றனர். அவர்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும், சிறப்புத் தேர்வு நடத்தி, 1,652 பேர் பணியில் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணியிடம், 'சார் நிலை பணியாளர்' என, அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து, கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் துணை அமைப்பாளர் முத்து வடிவேல் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளாக, கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. ஆசிரியராக சேரலாம் என, பி.எட்., முடித்த, 40
Posts
Showing posts from March 14, 2017
- Get link
- X
- Other Apps
சிறப்பாசிரியர் தகுதித் தேர்வு: 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு. தமிழகத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் டி.இ.டி., தேர்வுடன், சிறப்பாசிரியருக்கான தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என தொகுப்பாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.கல்வித் துறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடங்கள், 2005ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன. அரசு பள்ளிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களில், தேவை கருதி 2006ல் தொகுப்பூதியம் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பின், கல்வித்துறையில் 11 ஆண்டுகளாக இவ்வகை ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நடக்கவில்லை. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் தமிழகத்தில் டி.இ.டி., தேர்வுகள் நடத்த முடிவானபோது, சிறப்பாசிரியர் தகுதித் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. ஆனால், அதுதொடர்பான முடிவுகள் இதுவரை