Posts

Showing posts from February 6, 2017
Image
புதிய பாடம்-பிளஸ் 1 வகுப்பில் அடுத்த ஆண்டு அமல்
காலிப் பணியிடங்கள் 3 லட்சமாக அதிகரிக்கும்:அரசு ஊழியர் சங்கத் தலைவர் தகவல் அரசு ஊழியர் காலி பணியிடங்கள் 2017--18ல் மூன்று லட்சமாக அதிகரிக்க உள்ளதாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:பணியாளர்கள் நியமனத்தில் அரசு அக்கறை காட்டவில்லை. அனைத்து துறைகளிலும் 2.50 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இது 2017---18ல் 3 லட்சமாக அதிகரிக்கும்.பொதுப்பணித்துறை யில் பொறியாளர்கள் 90 சதவீதம் பேர் 2019ல் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். இதனால் அத்துறையில் பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது. அதற்குள் அரசு பணி நியமனங்கள் நடைபெற வேண்டும். புதிய பென்ஷன் : திட்டத்தை ரத்து செய்வது, காலி இடங்களை நிரப்புவது, எட்டாவது சம்பளக்குழு அமைத்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 15ல் மாவட்ட தலைநகரங்களில் ஊர்வலம் நடத்தப்படுகிறது. அதன் பின்பும் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஏப்.25 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.
உதவி பேராசிரியர் பணி: 'செட்' தேர்வு அறிவிப்பு 'உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித் தேர்வு, ஏப்ரல் 23ல் நடக்கும்' என, தெரசா பல்கலை அறிவித்து உள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவிப் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' மற்றும் மாநில அளவிலான, 'செட்' தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். 'நெட்' தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் எந்த பல்கலையிலும் பணியில் சேரலாம்.'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால், எந்த மாநில, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றனரோ, அந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியில் சேர முடியும். 'நெட்' தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம். தமிழக, 'செட்' தேர்வில், ஆங்கிலம் அல்லது தமிழில் தேர்வு எழுதலாம். தமிழகத்தில், 'செட்' தேர்வானது, கடந்த ஆண்டு முதல், கொடைக்கானல் தெரசா பல்கலை மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, ஏப்., 23ல் நடக்கும் என, 'செட்' தேர்வு கமிட்டிஅதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், 16 பொறுப்பு மையங்கள் மூ