Posts

Showing posts from January 28, 2017
தமிழகத்தில் 15 ஆயிரம் போலீசார் தேர்வு தமிழக காவல் துறையில் 15,711 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வரும் மே 21ம் தேதி நடக்கிறது. காலியிட விவரம்: இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1016 இடங்களும், தீயணைப்போர் 1512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும். வயது: 2017 ஜூலை 1 அடிப்படையில் 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1993 ஜூலை 1க்கு பின்னரும், 1999 ஜூலை 1 க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். இதிலிருந்து பி.சி, எம்.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு வயது சலுகை உண்டு. உடல்கூறு அளவுகள்: உயரம் குறைந்த அளவு...
Image
3300 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் அறிவிப்பு.
ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 30-ம்தேதிக்குள் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன், ஒட்டுமொத்த ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்-30 தேதிக்குள் நடத்தப்படும்.  தகுத்தேர்வு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் விரைவில் களையப்படும். கால அட்டவணை தயாரிக்கப்பட்டு ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படு ம். காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வு வெற்றி பெற்றவர்களை கொண்டு நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் மதிப்பெண் முறையை ரத்து செய்து விட்டு தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு அடுத்த இரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார். தகுதித் தேர்வு நடத்தும் தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. தமிழகத்தி வெற்றி பெற்ற 30,000 பேருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பதால், அவர்களைக் கொண்டே தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், புதிதாக தகுதித் தேர்வு நடத்தப்படாது என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார். அவர் கூறிய தகவல்கள் அறியாமையில் வெளிப்பட்டவை என்பதையும், ஆண்டுக்கு ஒரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டியது சட்டப்படி கட்டாயம் என்பதையும் கடந்த 13-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆதாரங்களுடன் விளக்கியிருந்தேன். அதை ஏற்ற...