
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் 4–வது நாளான நேற்று வழக்கத்தை விட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் 4–வது நாளான நேற்று வழக்கத்தை விட பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இளைஞர்கள், பொதுமக்களும் குவிந்ததால் புதுவையே ஸ்தம்பித்தது. நிரம்பி வழிந்த திடல் புதுச்சேரியில் கடந்த 17–ந்தேதி மாலை முதல் ரோடியர் மில் திடலில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய நடந்து வரும் இந்த போராட்டம் 4–வது நாளாக நேற்று நீடித்தது. காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள் ரோடியர் மில் திடல் நோக்கி சாரைசாரையாக வந்த வண்ணம் இருந்தனர். மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று முழுஅடைப்பு என்பதால் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடாத நிலையில் ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டம் நடந்த ரோடியர் மில் திடலுக்கு நடந்து வந்து கலந்து கொண்டனர். இதுமட்டுமின்றி இரு சக்கர வாகனங்களிலும் வந்து குவிந்தனர். பெற்றோர் பலர் தங...