பிப்ரவரி 11இல் குரூப்-4 தேர்வு!
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தேவையான பணியாளர்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது.
தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், குரூப்-4, வி.ஏ.ஓ ஆகிய பணியிடங்களுக்குத் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்துத் தேர்வை இனி ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.
செலவைக் குறைக்கும் வகையில் இரண்டு தேர்வையும் ஒன்றாக இணைந்து சி.சி.எஸ்.இ-4 என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி குரூப்-4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான சி.சி.எஸ்.இ-4 தேர்வுகள் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளுக்காக விண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 13ஆம் தேதியாகும். டி.என்.பி.எஸ்.சியின் இணையதளத்தில் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை, கட்டண சலுகை, கல்வித்தகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 9000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெறவுள்ளது.
Comments
Post a Comment