மாணவர்களுக்கான 'நீட்' பயிற்சி 'ஆன்லைன்' பதிவு துவக்கம்
பிளஸ் 2மாணவர்களுக்கான, நுழைவு தேர்வு பயிற்சிக்கு, நேற்று முதல், 'ஆன்லைன்' பதிவு துவங்கியது; வரும், 26ம் தேதி வரை பதிவு செய்யலாம். தமிழக பள்ளிக் கல்வி துறையின், ஒருங்கிணைந்த புதிய இணைய தளத்தின் செயல்பாட்டை, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன், நேற்று துவங்கி வைத்தார். இதில் 'நீட்' உள்ளிட்ட நுழைவு தேர்வுகளுக்கான பயிற்சி திட்டத்திற்கு, புதிய இணையதளத்தில், 'ஆன்லைன்' பதிவும் துவங்கியது.
இது குறித்து, அமைச்சர், செங்கோட்டையன் கூறுகையில், ''மாணவர்கள்தங்கள் பள்ளி வழியாக, பயிற்சியில் சேர, பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இருந்து, 3,000 ஆசிரியர்களுக்கு, பிற மாநில நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிந்ததும், அந்த ஆசிரியர்கள், தமிழக மாணவர்களுக்கு, வார இறுதி நாட்களில் சிறப்பு பயிற்சி அளிப்பர்,'' என்றார்.
பள்ளிக் கல்வியின், http://tnschools.gov.in என்ற புதிய இணையதளத்தில்,
மாணவர்கள், தங்கள் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக, பெயர் மற்றும் பயிற்சி மைய விபரங்களை பதிவு செய்யலாம். இதற்கு, வரும், 26ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், 31 தலைமை ஆசிரியர்
களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரியாக, பதவி உயர்வு அளித்து, ஆணை வழங்கப்பட்டது.

Comments
Post a Comment