வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் அரசின் புதிய உத்தரவு
வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அசல் ஆவணங்களை வாகனத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் புதிய உத்தரவு வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.புத்தகம், காப்பீட்டுச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் ஆவணங்களை வாகனத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பு, வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகரில் ஏற்கெனவே ஒவ்வொரு சாலையிலும் போலீஸாரால் இருசக்கரவாகன ஓட்டிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாகின்றனர்.
தற்போது, வாகனத்தில் அசல் ஆவணங்கள் இருக்க வேண்டும் என்ற புதிய உத்தரவு பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. தற்போது மழைக் காலம் என்பதால் இருசக்கர வாகனத்தில் அசல் ஆவணங்கள் வைத்தால், அவை நனைந்து சேதமாகும். இதனால், ஆவணங்களை வீட்டில் வைத்து வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் என்ற பெயரில் போலீஸார் வீண் அபராதம் விதிக்கின்றனர்.
கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் அசல் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எளிது. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இது பெரும் சிரமம்.
தவணை முறையில் இருசக்கர வாகனம் வாங்குபவர்களிடம் அதற்கான அசல் ஆவணங்களை நிதிநிறுவனத்தினர் உடனடியாக கொடுப்பதில்லை. கடனை அடைத்த பிறகே ஆர்.சி.புத்தகம் உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்குகின்றனர்.
அதுவரை வாகன ஓட்டிகளின் நிலை என்னாவது என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, இதுபோன்ற பிரச்னைகளுக்கு அரசு, மாற்று வழிகளை உருவாக்கி, நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments
Post a Comment