17ல் பி.எட்., கவுன்சிலிங் துவக்கம் : இணையதளத்தில் 'கட் ஆப்' வெளியீடு
பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், ௧௭ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 14 அரசு கல்வியியல் கல்லுாரிகள், ஏழு அரசு உதவி பெறும் கல்லுாரிகள் என, ௨௧ கல்வியியல் கல்லுாரிகளில், ௧,௭௫௩ இடங்களுக்கு, பி.எட்., படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
5,733 பேர் : இதற்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், தமிழக அரசின் சார்பில், லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரியால் நடத்தப்படுகிறது. விண்ணப்ப பதிவு, ஜூன், 21ல் துவங்கி, 30ல் முடிந்தது; 5,733 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர் சேர்க்கை செயலரும், லேடி வெலிங்டன் கல்லுாரி முதல்வருமான கலைச்செல்வன் தலைமையிலான குழுவினர், விண்ணப்பங்களை பரிசீலனை செய்தனர். இதில், 'கட் ஆப்' மதிப்பெண்ணின் படி, 2,996 பேர், முதற்கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர். வரும், 17 முதல் கவுன்சிலிங் துவங்குகிறது.
கவுன்சிலிங்கில் பங்கேற்க வருவோர், 'செயலர், தமிழ்நாடு பி.எட்., மாணவர் சேர்க்கை, 2017 - 18' என்ற பெயரில், கவுன்சிலிங் கட்டணத்தை, வங்கி வரைவோலையாக கொண்டு வர வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு, 1,000 ரூபாயும், மற்றவர்களுக்கு, 2,000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண், கல்லுாரிகளில் உள்ள பாடப்பிரிவு போன்ற விபரங்களை, www.ladywillingdoniase.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
பி.இ., - பி.டெக்., மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினர் மற்றும் பழங்குடியினர் - ஜூலை, 17; மற்ற பிரிவினரில் ஆங்கிலம், தமிழ் பாடம் - 18; புவியியல், பொருளியல், வணிகவியல், வரலாறு - 19; தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் - 20; இயற்பியல், வேதியியல் - 21 கணிதம் - 22ம் தேதி கவுன்சிலிங் நடைபெறும்.
பி.இ., - பி.டெக்., பட்டம் பெற்றவர்களுக்கு, வரும், 19ம் தேதி காலை, 9 மணிக்கு, கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

Comments
Post a Comment