ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு விடைத்தாள் திருத்தம், அடுத்த வாரம்
துவங்குகிறது.

தமிழகம் முழுவதும், மூன்று ஆண்டுகளுக்கு பின், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடந்தது. இதில், முதல் தாளில், இரண்டு லட்சத்து, 37 ஆயிரம் பேரும், இரண்டாம் தாளில், ஐந்து லட்சத்து, மூன்றாயிரம் பேரும் பங்கேற்றனர். 

கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை, வினாத் தாள் அடிப்படையில் தேர்வு நடந்தது. தேர்வுக்கான விடைக்குறிப்புகள், இரு வாரங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டு, தோராய விடைக்குறிப்பு வெளியானது. இதில், விடைகள் குறித்து சந்தேகம் அடைந்தவர்கள், சரியான விடைக்குறிப்புகளை கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு, கடிதம் எழுதினர்.

இந்த கடிதங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் ஆய்வு செய்ததில், வாரியம் அளித்த பல விடைக்குறிப்புகள் தவறாகவும், சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. 

ஒரு வாரத்தில், விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது. ஜூலை முதல் வாரத்தில், முடிவுகள் வெளியாகும் என, கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog