பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு


Exams
Ads by Kiosked
தமிழகத்தில் 2017-2018-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.
நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு அடுத்த ஆண்டு (2018) மார்ச் 1 முதல் ஏப்ரல் 6 வரையிலும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16 வரையிலும், பத்தாம் வகுப்புக்கு மார்ச் 16 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கு அடுத்த ஆண்டு மே 16-ஆம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மே 30-ஆம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 23-ஆம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை (தேர்வு நேரம்: காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை):-
மார்ச் 1 வியாழக்கிழமை- மொழிப்பாடம் முதல் தாள்
 மார்ச் 2 வெள்ளிக்கிழமை- மொழிப்பாடம் இரண்டாம் தாள்
 மார்ச் 5 திங்கள்கிழமை- ஆங்கிலம் முதல் தாள்
 மார்ச் 6 செவ்வாய்க்கிழமை- ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 9 வெள்ளிக்கிழமை- வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 12 திங்கள்கிழமை- கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, சமச்சீர் உணவியல்
மார்ச் 15 வியாழக்கிழமை- அனைத்து தொழிற்கல்விப் பாடங்கள், அரசியல் அறிவியல், செவிலியர் (பொது), புள்ளியியல்
மார்ச் 19 திங்கள்கிழமை- இயற்பியல், பொருளியல்
மார்ச் 26 திங்கள்கிழமை- வேதியியல், கணக்குப்பதிவியல்
ஏப்ரல் 2 திங்கள்கிழமை- உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
ஏப்ரல் 6 வெள்ளிக்கிழமை- தகவல் தொடர்பியல் ஆங்கிலம், இந்திய கலாசாரம், உயிரி வேதியியல், கணினி அறிவியல், சிறப்புத்தமிழ்

பிளஸ் 1 வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை (தேர்வு நேரம்: காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை)

மார்ச் 7 புதன்கிழமை- மொழிப்பாடம் முதல் தாள்
 மார்ச் 8 வியாழக்கிழமை- மொழிப்பாடம் இரண்டாம் தாள்
 மார்ச் 13 செவ்வாய்க்கிழமை- ஆங்கிலம் முதல் தாள்
 மார்ச் 14 புதன்கிழமை- ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 20 செவ்வாய்க்கிழமை- கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, சமச்சீர் உணவியல்
மார்ச் 23 வெள்ளிக்கிழமை- வணிகவியல், மனையியல், புவியியல்
 மார்ச் 27 செவ்வாய்க்கிழமை- இயற்பியல், பொருளியல்
 ஏப்ரல் 3 செவ்வாய்க்கிழமை- வேதியியல், கணக்குப்பதிவியல்
ஏப்ரல் 9 திங்கள்கிழமை- உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
ஏப்ரல் 13 வெள்ளிக்கிழமை- தகவல் தொடர்பியல் ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்புத் தமிழ்
ஏப்ரல் 16 திங்கள்கிழமை - அனைத்துத் தொழிற்கல்விப் பாடங்கள், அரசியல் அறிவியல், செவிலியர் (பொது), புள்ளியியல்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை (தேர்வு நேரம்: காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை):

 மார்ச் 16 வெள்ளிக்கிழமை- மொழிப்பாடம் முதல் தாள்
 மார்ச் 21 புதன்கிழமை- மொழிப்பாடம் இரண்டாம் தாள்
 மார்ச் 28 புதன்கிழமை- ஆங்கிலம் முதல் தாள்
 ஏப்ரல் 4 புதன்கிழமை- ஆங்கிலம் இரண்டாம் தாள்
 ஏப்ரல் 10 செவ்வாய்க்கிழமை- கணிதம்
 ஏப்ரல் 12 வியாழக்கிழமை- விருப்ப மொழிப்பாடம்
 ஏப்ரல் 17 செவ்வாய்க்கிழமை- அறிவியல்
 ஏப்ரல் 20 வெள்ளிக்கிழமை சமூக அறிவியல்.

Comments

Popular posts from this blog