இலவச எல்.கே.ஜி., சேர்க்கை இதுவரை 20ஆயிரம் விண்ணப்பம்
தமிழகத்தில், சுயநிதி பள்ளிகளில், இலவச, எல்.கே.ஜி., சேர்க்கைக்கு, 1.20 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், 20 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டப்படி, சிறுபான்மை அந்தஸ்து பெறாத சுயநிதி பள்ளிகள், எல்.கே.ஜி.,யில், 20 சதவீத இடங்களில், இலவசமாக மாணவர்களை சேர்க்க வேண்டும்.
இதற்கான கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இதன்படி, தமிழகத்தில் உள்ள, 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 1.26 லட்சம் இடங்கள் உள்ளன. அவற்றுக்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஏப்., 20ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. இதில், நேற்று முன்தினம் வரை, 20 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். இலவச சேர்க்கைக்கு, இன்னும் ஒரு வாரம், அதாவது, மே, ௧௮ வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதன் விபரங்களை, http://www.dge.tn.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Comments
Post a Comment