சிறப்பாசிரியர் தகுதித் தேர்வு: 50 ஆயிரம் பேர் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் டி.இ.டி., தேர்வுடன், சிறப்பாசிரியருக்கான தகுதி தேர்வும் நடத்த வேண்டும் என தொகுப்பாசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.கல்வித் துறையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பாசிரியர் பணியிடங்கள், 2005ம் ஆண்டு முதல் காலியாக உள்ளன. 

அரசு பள்ளிகளில் உள்ள நிரந்தர பணியிடங்களில், தேவை கருதி 2006ல் தொகுப்பூதியம் அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பின், கல்வித்துறையில் 11 ஆண்டுகளாக இவ்வகை ஆசிரியர்களுக்கான நியமனங்கள் நடக்கவில்லை.

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 2012 முதல் தமிழகத்தில் டி.இ.டி., தேர்வுகள் நடத்த முடிவானபோது, சிறப்பாசிரியர் தகுதித் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டது.இதற்காக மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் தயாரிக்கும் பணியும் முடுக்கிவிடப்பட்டது. ஆனால், அதுதொடர்பான முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மாநிலம் முழுவதும், தற்போது 50 ஆயிரம் பேர் சிறப்பாசிரியர் படிப்பு முடித்து காத்திருக்கின்றனர். இவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்த அப்போது இருந்த கல்வி அதிகாரிகள், அமைச்சர்கள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது டி.இ.டி., தேர்வு நடத்தவுள்ள நிலையில், சிறப்பு தகுதி தேர்வும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு இசை ஆசிரியர் கழக மாநில செயலாளர் பெரியசாமி, சட்ட ஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது: அனைத்து அரசு பள்ளிகளிலும் இசை, ஓவியம், உடற்கல்வி, கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2005ம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற ஆசிரியர் பணியிடங்களில் நிரந்தர நியமனங்கள் நடக்கவில்லை. 

சிறப்பாசிரியர்கள் முறையே லோயர் மற்றும் ைஹயர் கிரேடு படிப்பு, பட்டயப் படிப்புகள் முடித்தவர்கள். பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கின்றனர்.டி.இ.டி., தேர்வுடன் 50 ஆயிரம் பேர் எதிர்பார்க்கும் சிறப்பாசிரியர் தகுதித் தேர்வும் நடத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Comments

Popular posts from this blog