தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு: சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்-பதில்

தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிடக் கோரும் தனிநபர் மசோதாவை டெல்லி மேல்-சபையில் தி.மு.க. எம்.பி. திருச்சி
சிவா கொண்டு வந்தார். அது குறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கையில் கூறிய தாவது:-
கற்பிக்கும் பணியில் மட்டுமே ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்தில் நான் உடன்படுகிறேன். தேர்தல் பணியில் யாரை ஈடுபடுத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது. எனவே, திருச்சி சிவாவின் உணர்வுகள், தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும். அனைத்து கட்சி கூட்டம் எப்போது நடந்தாலும், இதை வலியுறுத்தி பேச திருச்சி சிவாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். ஆகவே, அவர் இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என கூறினார்.

Comments

Popular posts from this blog