ஆசிரியர்கள் நடத்திய மறியல் போராட்டம்
சென்னை :போலீசின் தடுப்புகளை மீறி, ஆசிரியர்கள் பதுங்கியிருந்து, கொரில்லா முறையில், மறியல் செய்தனர்.'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, இரண்டு கட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
மூன்றாம் கட்டமாக, நேற்று, 10 ஆயிரம் பேர், சென்னை தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். ஆனால் அவர்கள் வராமல் தடுப்புகள் அமைத்து, ஆசிரியர்கள் தடுக்கப்பட்டனர்.
திடீரென, ஏராளமான ஆசிரியர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் எதிரே உள்ள கண் மருத்துவமனை வளாகத்தில், தனித்தனியாக வந்து போலீசார் அசந்த நேரத்தில், கொரில்லா படை போல், மறியல் செய்தது கண்டறியப்பட்டது. மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Comments
Post a Comment