உதவி பேராசிரியர் பணி: 'செட்' தேர்வு அறிவிப்பு
'உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித் தேர்வு, ஏப்ரல் 23ல் நடக்கும்' என, தெரசா பல்கலை அறிவித்து உள்ளது.
கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உதவிப் பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' மற்றும் மாநில அளவிலான, 'செட்' தேர்வுகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டும். 'நெட்' தேர்ச்சி பெற்றால், நாடு முழுவதும் எந்த பல்கலையிலும் பணியில் சேரலாம்.'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால், எந்த மாநில, 'செட்' தேர்வில் தேர்ச்சி பெற்றனரோ, அந்த மாநில கல்லுாரிகளில் மட்டுமே பணியில் சேர முடியும். 'நெட்' தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுதலாம். தமிழக, 'செட்' தேர்வில், ஆங்கிலம் அல்லது தமிழில் தேர்வு எழுதலாம்.
தமிழகத்தில், 'செட்' தேர்வானது, கடந்த ஆண்டு முதல், கொடைக்கானல் தெரசா பல்கலை மூலம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, ஏப்., 23ல் நடக்கும் என, 'செட்' தேர்வு கமிட்டிஅதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும், 16 பொறுப்பு மையங்கள் மூலம், 25 பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. தேர்வுக்கு, பிப்., 12 முதல் மார்ச் 12 வரை, ஆன்லைனில், http://www.tnsetexam2017mtwu.ac.in/ என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தாமத கட்டணத்துடன், மார்ச் 19 வரை விண்ணப்பிக்க முடியும். கூடுதல் விபரங்களை, 'செட்' தேர்வு இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Comments
Post a Comment