சிந்தித்து பதில் எழுதும் வினாக்கள் : பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்ப்பு


மாணவர்களின் சிந்தித்து பகுத்தாய்வு செய்யும் திறனை அதிகரிக்கும் வினாக்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் இடம்பெற உள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் உயர் கல்வியை தீர்மானிக்கிறது. அதனால் தான், இந்த இரு தேர்வுகளுக்கும், கல்வித் துறை மற்றும் பெற்றோர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில ரேங்க் பெறும் பல மாணவர்கள், மருத்துவம் அல்லது இன்ஜினியரிங்கில் சேர்ந்தாலும், முதல் செமஸ்டரிலேயே, மிக குறைந்த மதிப்பெண் பெறும் நிலை உள்ளது. 

அவர்களுக்கு, 'ஓரியன்டேஷன்' என்ற முன் தயாரிப்பு பயிற்சி வழங்க வேண்டியுள்ளது.இது குறித்து, அண்ணா பல்கலை மற்றும் தனியார் கல்லுாரி ஆசிரியர்கள், தேர்வுத் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.இதன்படி, இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் என்றில்லாமல், சிந்தித்து பதில் எழுதும் வகையில், பல கேள்விகள் இடம் பெறும் என, கூறப்படுகிறது.கடந்த ஆண்டு பொதுத்தேர்விலும், இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் முடிந்த அரையாண்டு தேர்வு வினாத்தாளும், இந்த வகையில் தான் அமைக்கப்பட்டிருந்தது. அதே போல், பொதுத்தேர்வு வினாத்தாளும் அமையும் என, கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog