தமிழகத்தில் 15 ஆயிரம் போலீசார் தேர்வு

தமிழக காவல் துறையில் 15,711 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதற்கான எழுத்துத்தேர்வு வரும் மே 21ம் தேதி நடக்கிறது.

காலியிட விவரம்:
இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1016 இடங்களும், தீயணைப்போர் 1512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித்தகுதி :
பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.


வயது: 2017 ஜூலை 1 அடிப்படையில் 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 1993 ஜூலை 1க்கு பின்னரும், 1999 ஜூலை 1 க்கு முன்பும் பிறந்தவராக இருக்க வேண்டும். இதிலிருந்து பி.சி, எம்.பி.சி., எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு வயது சலுகை உண்டு.

உடல்கூறு அளவுகள்: உயரம் குறைந்த அளவு 170 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 167 செ.மீ.,) இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 81 செ.மீ., மார்பு விரிவாக்கம் குறைந்த 5 செ.மீ., இருக்க வேண்டும். பெண்கள் உயரம் 159 செ.மீ., (எஸ்.சி.,/எஸ்.டி., 157 செ.மீ.,)இருக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:
தேர்வு செய்யப் பட்ட 284 அஞ்சல் நிலையங்களில், ரூ.30 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். தேர்வுக்கட்டணம் ரூ. 135.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 22ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.


மதிப்பெண் விவரம்: மொத்த மதிப்பெண்கள் 100 ( எழுத்துத்தேர்வுக்கு 80 மதிப்பெண்கள், உடல்திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்கள், என்.சி.சி., போன்ற சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண்கள்) தேர்ச்சி முறை: முதலில் எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் திறன் போட்டி, பின் மருத்துவ பரிசோதனை ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முழு விவரங்களுக்கு:www.tnusrb.tn.gov.in

Comments

Popular posts from this blog