Posts

Showing posts from November 30, 2016
புதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி! 1. எட்டாம் வகுப்பு வரைக்கான, 'வகுப்பு நிறுத்தம்' கொள்கை, இனி, ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பின்பற்றப்படும்.  2. இளம் வயதிலேயே மாணவர்களின் ஆர்வத்தையும், இயல்திறனையும் கண்டறிய, 'கல்வி விருப்பத் தேர்வுகள்' நடத்தப்படும். கற்றலுக்கு சிறப்புத் தேவை வேண்டியவர்கள், மெதுவாகக் கற்பவர்கள் மற்றும் குறை சாதனையாளர்களை கண்டறிந்து பயிற்சிகள் கொடுத்து, எதிர்காலத்தில் அவர்களை, தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்றவர்களாக உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.  3. அறிவியல், கணிதம், ஆங்கிலம் என, மூன்று பாடங்களுக்கு, தேசிய அளவில் பொதுவான பாடத் திட்டமும்; சமூக அறிவியல் போன்ற இதர பாடங்களுக்கு, தேசிய மற்றும் மாநில அளவிலான, இரு பகுதிகள் இருக்கும் வகையில் பாடத் திட்டங்கள் பின்பற்றப்படும்.  4. பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலத்தில் தேர்வுத் தோல்விகளை குறைக்க, இந்தப் பாடங்களில் உயர் தகுதி நிலை மற்றும் குறைந்த தகுதி நிலை என, இரு தேர்வுகள் நடத்தப்படும்.  5. பாடநுாலில் உள்ளதை மட்டுமின்றி விரிந்த விழிப்புணர்வு, புரிதல், கற்றதன் முழுமைத்...