ராமானுஜன் I: ‘காலம் கசக்கி எறிந்த கணிதப்பூ’-நன்றி "தினத்தந்தி " வ ரலாற்றில் புதைந்து கிடக்கும் ரகசியங்களைத் தோண்டி எடுத்து தரும் விறுவிறுப்பான தொடர், கோமல் அன்பரசன் எழுதும் ‘ரகசியமான ரகசியங்கள்’. இதில் இதுவரை மும்தாஜ், தாஜ்மகால் பற்றிய ரகசியங்களைப் பார்த்தோம். இந்த வாரம் முதல் உலகப்புகழ் பெற்ற கணிதமேதை ராமானுஜன் வாழ்க்கைப் பின்னணியில் உள்ள அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். புயல் வேகத்தில் ரெயில் வரும் சுரங்கப்பாதையில் போய் சுருண்டு படுத்தார் ராமானுஜன். அதற்கு மேல் அவருக்கு வாழப் பிடிக்கவில்லை. ஓராயிரம் கனவுகளோடு கடல் கடந்து இங்கிலாந்து வந்த பின்னும் துயரமும் தோல்விகளும் தொடர்கிறதே என்று வெம்பினார். உடம்பு வேறு படுத்தி எடுத்தது. பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்வதற்கு கும்பகோணத்தில் உள்ள மனைவி ஜானகியை அனுப்பி வைக்கவும் அம்மா கோமளம் மறுத்துவிட்டார். அதோடில்லாமல் மனைவியை, அம்மா கொடுமைப்படுத்துவதாக வந்த செய்திகள் அவர் நெஞ்சில் நெருப்பை அள்ளிக்கொட்டின. ஆயிரக்கணக்கில் அற்புதமான சூத்திரங்களைத் தந்த கணித மேதையின் மனசுக்குள் இன்னொரு எண்ணமும் குமைச்சலை ஏற்படுத்தியத...
Posts
Showing posts from November 28, 2016