ஆதார் மையத்தில் வேலை வாய்ப்பு சென்னை: ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விரும்பும், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள்' வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், தமிழகம் முழுவதும், 486 இ - சேவை மையங்களை அமைத்து, அரசு துறைகள் சார்ந்த சேவைகளை, வழங்கி வருகிறது. கூடுதலாக, 339 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து, புதிதாக ஆதார் சேர்க்கை பணிகளை, மேற்கொண்டு வருகிறது.தற்போது, ஆதார் சேர்க்கைக்கு, அதிக மக்கள் வருவதால், தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது. இதில், 'டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்' ஆக, சேர விரும்புவோர், www.tavtv.in இணையதளத்தில், வரும், 30ம் தேதிக்குள், பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களை, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Posts
Showing posts from November 23, 2016
- Get link
- X
- Other Apps
புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு? புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் 1000-க்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பு. புதிதாக நடத்தப்பட உள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் ஆயிரத்துக்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களே நிரப்ப வாய்ப்பிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கடைசியாக ஆசிரி யர் தகுதித்தேர்வு கடந்த 2013-ல் நடத்தப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தகுதித்தேர்வு நடத் தப்படவில்லை. தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுப் பிரிவி னருக்கு 50 சதவீத மதிப்பெண் தளர்வு, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் ஆசிரியர் நியமனம் ஆகியவை தொடர்பான வழக்கு கள் முடிவடைந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்து வதற்கான சூழல் உருவாகி யுள்ளது. முந்தைய தகுதித்தேர்வு மூலம் பள்ளிக் கல்வித்துறையிலும் சரி, தொடக்கக் கல்வித்துறையிலும் சரி அதிக எண்ணிக்கையிலான பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களும், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களு