TET தேர்வு மூலம் விரைவில் 4500 பணியிடம் வரை நிரப்பப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் பேட்டி TNTET தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. பாண்டியராஜன் அவர்களது பேட்டி. Video *. CLICK HERE TO VIEW VIDEO
Posts
Showing posts from November 22, 2016
- Get link
- X
- Other Apps
ஜூலை மாத நெட் தேர்வு முடிவு வெளியீடு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) முடிவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் இந்தத் தேர்வு சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படுகிறது. 2016 டிசம்பர் மாதத்துக்கான தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ அக்டோபர் 16-ஆம் தேதி வெளியிட்ட நிலையில், ஜூலை மாதத் தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால், ஜனவரி மாதத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இதையடுத்து ஜனவரி மாத நெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நவம்பர் 16-ஆம் தேதியிலிருந்து, நவம்பர் 23-ஆக நீட்டித்தது. ஜூலை மாத நெட் தேர்வு முடிவை திங்கள்கிழமை சிபிஎஸ்இ வெளியிட்டது. www.cbsenet.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
- Get link
- X
- Other Apps
TNPSC குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. திங்கள்கிழமை வெளியிட்ட தகவல்:- குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி. விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்னைகளோ எழ வாய்ப்புள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடு செய்ய வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்பு தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானதுதான் என்பதை உறுதி செய்து சமர்ப...