Posts

Showing posts from November 18, 2016
8ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பம் எட்டாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, இன்று முதல், 25 வரை, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.  அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அடுத்த ஆண்டு ஜனவரியில் நடக்கவுள்ள, 8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு, 12 ஆண்டு, ஆறு மாதங்களை பூர்த்தி அடைந்தவர்கள், இன்று முதல், 25 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.  அரசு தேர்வுத் துறையின் சேவை மையங்கள் மூலம்,  www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களை, தேர்வுத் துறை இணையதளத்தில் அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாணவர்களின் விவரம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை விரைவில் சேகரித்து சரிசெய்யவேண்டும். மாணவர்கள் பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி, ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து வகைகளும் அந்த பட்டியலில் இடம்பெற வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் வருகை பதிவேட்டில் உள்ளபடி சரியாக இருக்க வேண்டும். இதனை கல்வி தகவல் மேலாண்மை முறையில் ஏற்கனவே உள்ளடு செய்த மாணவர்களிடம், அவர்கள் கொடுத்த விவரங்கள் சரியாக உள்ளனவா? என வகுப்பு ஆசிரியர்கள் சரிபார்க்கவேண்டும். இதில் எந்தவித தவறும் இருக்கக்கூடாது. கண்க...