ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் தகவல் ஆசிரியர் தகுதித் தேர்வு விரைவில் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன்தெரிவித்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியது: தமிழக முதல்வர் ஜெயலலிதா தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவு உள்ளிட்ட பல்வேறு மக்களுக்காக ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதமாக மத்திய அரசு விதித்திருந்த தகுதி மதிப்பெண்ணை 55ஆக குறைத்தார். அதில், 80 ஆயிரம் பேருக்கு மேல் வெற்றிபெற்றும் அதற்கான பயன் கிடைக்காமல் இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 55 சதவீத மதிப்பெண் என்ற முடிவுக்கு, தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நற்சான்று அளித்திருக்கிறது. இதற்கான உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது என்ற முடிவை ஒரு வருட சட்டப் போராட்டத்துக்கு பிறகு உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் மாத தொடக்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும். பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியுமோ அ
Posts
Showing posts from November 10, 2016
- Get link
- X
- Other Apps
TNTET:இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.:ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரி இயக்குனர்-விகடன் செய்தி மத்திய அரசு 2011ம் ஆண்டு இலவச கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அவர்களின் திறமை குறித்து தகுதி தேர்வு நடத்தி பணியில் அமர்த்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதி தேர்வை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்யவும், பணியில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் முடிவு செய்தது. அதற்காக தமிழகத்தில் முதன் முதலாக தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 12.7.12ம் தேதி நடத்தியது. 7 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் துரதிஷ்டவசமாக