10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு, செப்., 28ல், துவங்கும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: செப்., 28ல், தமிழ் முதல் தாள்; 29ல், தமிழ் இரண்டாம் தாள்; 30ல், ஆங்கிலம் முதல் தாள்; அக்., 1ல், ஆங்கிலம் இரண்டாம் தாள்; அக்., 3ல், கணிதம்; அக்., 4ல், அறிவியல்; அக்., 5ல், சமூக அறிவியல் மற்றும் அக்., 6ல், விருப்ப மொழி பாடத் தேர்வுகள் நடக்கும். காலை, 9:15 மணி முதல், 9:25 வரை வினாத்தாள் படிக்க நேரம் வழங்கப்படும். ஐந்து நிமிடங்களில், தேர்வு எழுதுவோரின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, 9:30 மணி முதல், நண்பகல், 12:00 வரை தேர்வு நடக்கும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Posts
Showing posts from September 23, 2016
- Get link
- X
- Other Apps
மின் வாரிய பணியாளர் தேர்வு முடிவு வெளியாவது எப்போது? மின் வாரியத்தில் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு எழுதிய பட்டதாரிகள், முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் பணி இடங்கள் காலியாக உள்ளதால், பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், இளநிலை உதவியாளர், 'டைப்பிஸ்ட்' உட்பட, 2,175 பணி இடங்களை, எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப, மின் வாரியம் முடிவு செய்தது. இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு, அண்ணா பல்கலை மூலம், ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்டது; இதுவரை, தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. இது குறித்து, தேர்வு எழுதியவர்கள் கூறியதாவது: எழுத்து தேர்வு அறிவிப்பை, மின் வாரியம் பிப்ரவரியில் வெளியிட்டது. ஆனாலும், சட்டசபை தேர்தல் காரணமாக, ஐந்து மாதம் தாமதமாக தேர்வை நடத்தியது. அரசு நிறுவனங்கள், ஊழியர்களை தேர்வு செய்யும் போது, விண்ணப்பித்தவர்கள், பங்கேற்றவர்கள் விபரங்களை வெளியிடுவது வழக்கம். ஆனால், மின் வாரியம், அந்த விபரங்களை வெளியிடவில்லை; தேர்வு முடிவையும் வெளியிடவில்லை. இந்த தாமதத்தால், முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம்...