2016 ஆம் ஆண்டில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க கோரிக்கை
Posts
Showing posts from September 19, 2016
- Get link
- X
- Other Apps
B.Ed.: செப். 30-க்கு பின்னர் சேர்க்கை நடத்த அனுமதி இல்லை இளநிலை ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பில் (பி.எட்.) அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சேர்க்கை வெள்ளிக்கிழமையோடு முடிவடைந்தது. இதையடுத்து, தனியார் கல்லூரிகளில் சேர்க்கையை செப். 30-க்கு பின்னர் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் 21 பி.எட். கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் 1,777 இடங்களுக்கு மட்டும், ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 650-க்கும் அதிகமான சுயநிதிக் கல்லூரிகளில் இடங்கள்முழுவதையும், அவர்களே நிரப்பிக் கொள்கின்றனர்.இந்த இரண்டு ஆண்டு படிப்பில் 2016-17ஆம் கல்வியாண்டு சேர்க்கை ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. அரசுசார்பில் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வு சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 22 முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடத்தப்பட்டது. இதில் மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் மட்டும் நிரம்பின. நிரப்பப்படாத 463 இடங்களுக்...
- Get link
- X
- Other Apps
TRB : ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு: 'வாட்ஸ் ஆப்'பில் வெளியானது வினாத்தாள் விரிவுரையாளர் பணிக்கான தேர்வில், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் வெளியானதால், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பட்டதாரி பெண் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.,டி.,யில், ஆசிரியர்களுக்கும், பட்டதாரிகளுக்கும், ஆசிரியர் பயிற்சி வழங்க, 272 விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு, டி.ஆர்.பி., சார்பில், நேற்று முன்தினம் எழுத்து தேர்வு நடந்தது.மதுரை தேர்வு மையம் ஒன்றில், ஆங்கில விரிவுரையாளர் பதவிக்கு தேர்வு எழுதிய, தேனியை சேர்ந்த பட்டதாரி பெண், மொபைல் போனை தேர்வு அறைக்குள் கொண்டு வந்து, வினாத்தாளை படம் பிடித்து, 'வாட்ஸ் ஆப் குரூப்'பில் அனுப்பி உள்ளார். பின், பதில் வந்துள்ளதா என, பார்க்க முயன்ற போது, அறை கண்காணிப்பாளரிடம் சிக்கினார். இதுகுறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் ராஜராஜேஸ்வரி மற்றும் எஸ்.சி.இ.ஆர்.டி., இணை இயக்குனர் குப்புசாமி ஆகியோர், அந்த பெண்ணிடம் விசாரித்து, போலீசில் புகார்அளித்தனர்.ஆ...
- Get link
- X
- Other Apps
பொது தேர்வில் கணினி விடைத்தாள்: தேர்வு துறை திட்டம் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு, கணினி விடைத்தாள் வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், விடை திருத்தும் நாட்கள் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தேர்வுத்துறை சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆண்டுதோறும், மார்ச் மாதம் நடைபெறும் இந்தத் தேர்வுகளில், இரண்டு வகுப்புகளிலும் சேர்த்து, 18 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்; இவர்களின் விடைத்தாள்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்படுகின்றன. இந்தத் தேர்வில், கணினி அறிவியல் பாடத்திற்கு மட்டும், 'பார் கோடு' உடைய விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன; மாணவர்கள், சரியான விடையை தேர்வு செய்து குறியிட வேண்டும். இந்த விடைத்தாள்கள், கணினி முறையில் திருத்தம் செய்யப்படுகின்றன; அதனால், வினாத்தாளை சரியாக திருத்தம் செய்யவில்லை என்ற பிரச்னை எழாது. மேலும், விடைத்தாளை திருத்த ஆசிரியர்களும் தேவையில்லை; அதிக நேர விரயமும் இருக்காது.இந்த முறையை, அனைத்து பாடங்...